ARTICLE AD BOX

பேக்கரியில் புகுந்து மதுபோதையில் திமுக பிரமுகர் ஓசியில் தின்பண்டங்களை கேட்டு ரகளை செய்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் நகர் கார்த்திகேயன் சாலையில் ஜி..எம் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி என்கின்ற பெயரில் இனிப்பு பலகாரம் மற்றும் பேக்கரி கடை நடத்திய வருபவர் சுந்தரமூர்த்தி.
இவர் வழக்கம்போல் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜி கே எம் காலனி 30வது தெருவில் வசிக்கும் திமுக பிரமுகரான லோகேஷ் என்பவர் சுந்தரமூர்த்தியின் பேக்கரி கடைக்கு வந்துள்ளார்
அப்பொழுது தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்ட வாரே முழு குடி போதையில் இருந்த லோகேஷ்.
பேக்கரி உரிமையாளர் சுந்தரமூர்த்தி இடம் தின்பண்டங்களை ஓசியில் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு கடையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி மறுப்பு தெரிவிக்கவே முழு குடிபோதையில் இருந்த லோகேஷ் இதே பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த தனக்கு தின்பண்டங்களை தராமல் காசு கேட்கிறாயா? எனக் கூறி தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து பேக்கரியில் இருந்த தின்பண்டங்களை எடுத்து தெருவில் வீசி அதோடு அங்கு தின்பண்டங்களை தயாரிக்க வைத்திருந்த கடாய் மற்றும் எண்ணெய் பொருட்களை தரையில் கொட்டி கலாட்டாவில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது
மேலும் பேக்கரியில் இருந்த குளிர்பான பாட்டில்களையும் எடுத்து தெருவில் வீசி உடைத்த போதையில் ரகலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து லோகேஷிடம் கேட்டபோது அவர் அவர்களையும் திட்டியவாறு அவர்கள் மீதும் இந்த குளிர்பான பாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது.
முதல்வர் தொகுதியில் பேக்கரியில் திமுக பிரமுகர் ரகளை!#Trending | #chennai | #Bakery | #DMK | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/Jj1rlPb6w9
— UpdateNews360Tamil (@updatenewstamil) October 1, 2024இதை தொடர்ந்து இது குறித்து சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரவலூர் காவல்துறையினர் லோகேஷ் முழு குடிபோதையில் இருந்ததால் அவரை தங்களுடைய ரோந்து வாகனத்தில் அமர வைத்து அவரது வீட்டில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது
குடி போதை தெளிந்ததும் லோகேஷ். காலையில் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவார் எனவும் தற்போது அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது
திமுக பிரமுகர் குடிபோதையில் பேக்கரியில் தகராறு செய்து ஓசியில் தின்பண்டங்களைக் கேட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
The station பேக்கரியில் புகுந்து ஓசி SNACKS கேட்ட திமுக பிரமுகர்.. மதுபோதையில் கடையில் ரகளை.. ஷாக் வீடியோ! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.