ARTICLE AD BOX
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!
அஞ்சலி, ரம்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், ஒரு டீனேஜ் பெண்ணின் வாழ்வு,அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள்,ஆசைகள்,கனவுகள், வாழ்க்கையை பார்க்கும் கோணம் போன்றவற்றை வெளிப்படுத்தும் சமூக நோக்குச் செய்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால்,சில சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.
சங்கரன்கோவிலை சேர்ந்த மூன்று நபர்கள்,இந்த படத்தின் டீசர் சிறுமிகளை ஆபாசமாகக் காட்டுவதாகவும்,குழந்தைகளுக்கு எதிரான காட்சிகளை உள்ளடக்கியதாகவும் கூறி, யூடியூபில் இருந்து டீசரை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபால்,மத்திய அரசு தகவல் தொடர்புத்துறை மற்றும் கூகுள் இந்தியா ஆகிய தரப்பினருக்கு, டீசர் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால்,வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேட் கேர்ள் தற்போது சர்ச்சைக்குரிய திரைப்படமாக மாறியுள்ளதால் இந்த வழக்கின் முடிவை பொறுத்து இப்படம் வெளியாகுமா வெளியாகாத என்ற முடிவு தெரியவரும்.