பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!

11 months ago 116
ARTICLE AD BOX

தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாகக் கூறும் ஸ்டாலின், தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவாரா..? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. எங்கள் நிர்வாகிகள் விரும்பினால் யாருடனும் கூட்டணி வைப்போம், இல்லை விலகுவோம். தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாகக் கூறும் ஸ்டாலின், தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவாரா..? ஸ்டாலின் குடும்பத்தினரைத் தவிர திமுகவில் வேறு ஆளே இல்லையா..?.

கெங்கவல்லியில் கரும்புக் காட்டின் நடுவே கான்கிரீட் பாதை போட்டு நடந்து சென்றவர் ஸ்டாலின். பேன்ட், ஷு போட்டுக் கொண்டு ஏர் ஓட்ட வந்த ஸ்டாலினுக்கு விவசாயிகள் பற்றி என்ன தெரியும்..? விவசாயிகளைப் பற்றி எதுவும் தெரியாமல் தெரிந்தது போல நாடகமாடுகிறார் ஸ்டாலின், இன்றளவுக்கும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு, விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்திருப்பவன் நான், ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது ஓடோடி வந்து உதவி செய்து வரும் கட்சி அதிமுக, எனக் கூறினார்.

The station பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article