பேயுடன் மல்லுக்கட்டும் ஜி.வி.பிரகாஷ்…கொல நடுங்க வைக்கும் ‘கிங்ஸ்டன்’ பட டிரைலர்.!

2 weeks ago 13
ARTICLE AD BOX

கிங்ஸ்டன் பட டிரைலர் வெளியீடு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்திருக்கும் படமான கிங்ஸ்டன் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இப்படம் ஜி வி பிரகாஷின் 25 வது படம் என்பதால் டிரைலர் வெளியீட்டு விழாவை படக்குழு சென்னையில் பிரமாண்டமாக நடத்தியது.இவ்விழாவில் படக்குழுவை சேர்ந்த நபர்கள் மட்டுமில்லாமல் இயக்குனர்கள் வெற்றிமாறன்,ரஞ்சித்,சுதா கொங்கரா,தயாரிப்பாளர் தாணு உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து தயாரிக்கவும் செய்துள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: கணவரை பிரியும் விஜய் பட நடிகை…திடீரென எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்.!

கடலில் நடக்கும் கதையை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜிவி மீனவனாக நடிக்கிறார்,கடலில் போட்டில் செல்லும் போது பல பேய்களுடன் சண்டை போட்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை ரொம்ப ஆக்ரோஷமாக,பார்ப்பவரை கதி கலங்க வைக்கும் விதமாக எடுத்துள்ளனர்.

பல திகிலூட்டும் காட்சிகள் இப்படத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட vfx காட்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ஒவ்வொரு கட்சிகளும் நம்மை பிரமிக்க வைத்துள்ளது.

எப்போதும் காதல் சார்ந்த படங்களில் நடித்து சாதுவாக வலம் வந்த ஜி வி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் படம் அவரை நடிப்பில் அடுத்தகட்டத்திற்க்கு எடுத்து செல்லும் என்று கூறப்படுகிறது.தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது,

  • Kingston movie trailer launch பேயுடன் மல்லுக்கட்டும் ஜி.வி.பிரகாஷ்…கொல நடுங்க வைக்கும் ‘கிங்ஸ்டன்’ பட டிரைலர்.!
  • Continue Reading

    Read Entire Article