ARTICLE AD BOX
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டது.
அந்த பேருந்து அங்கு உள்ள அண்ணா சிலை அருகில் வளைவில் திரும்பிய போது அந்த வழியாக நடந்து சென்ற நபர் ஒருவர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த பயணிகள் சத்தம் போடவும் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
அதற்குள் பஸ் சக்கரத்தில் சிக்கிய அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இதுகுறித்து காந்திபுரம் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்த அந்த வாலிபர் பெயர் அஜ்மல் (வயது 40) கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
அவர் இரவு முழுவதும் அங்கு இருந்ததாகவும், கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு இருந்ததாகவும், பேருந்து வந்த போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
சிலர் அவர் தற்கொலை செய்ய பின் சக்கரத்தில் விழுந்ததாகவும் கூறினர்.இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்காக அண்ணா சிலை அருகில் உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் இனிப்பு கடைகள் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.