ARTICLE AD BOX
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:- வக்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதால் என்ன பயன்உள்ளது. ,பழனி கோவிலில் அறங்காவலராக இந்து அல்லதாவரை இருவரை நியமித்தால் ஏற்று கொள்வீர்களா என்றும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அவர் சமூகத்தில் இல்லாத நபர்களை நியமிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படியுங்க: 2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!
உச்ச நீதிமன்ற பல்வேறு கேள்விகளை மத்திய அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரை கேள்வி கேட்கலாமே என்றும், குடியரசு துணை தலைவர் எனக்கு எதுவுமே தெரியாது தெரிவித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதசார்பற்ற கட்சிகள் ஒன்று கூடி கேள்வி கேட்கிறோமே இதுவே மதசார்பற்ற அரசு அதுவே தளபதி ஸ்டாலின் ஆட்சி என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏராளமான முதல்வர்கள் இருந்தாலும், ஸ்டாலின் மட்டுமே வேந்தராக உள்ளார் இதுதான் அவருக்கு சிறப்பு என்பது தான்.
அதிமுக பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி என்றும் ,அதிமுக தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை. தமிழகத்தில் 40 சதவீத வாக்குகளை கொண்டது திமுக கூட்டணி. டாஸ்மாக் ஊழலில் விசாரிக்கட்டும் , எங்கள் தரப்பு சரியாக உள்ளது.
அமைச்சர் பொன் முடி பேச்சு தவறு தான் . முன்னாள் மேடை பேச்சாளர் என்றும், இப்போது அமைச்சராக உள்ளார். இந்த பேச்சை தவிர்த்திருக்கலாம் எனவும் ,ஆனால் உடனடியாக கனிமொழியிடம் இருந்து கருத்து வந்த்து. உடனடியாக தண்டனையாக கட்சி பதவியில் இருந்து நீக்கபட்டு உள்ளார்.
பெரியார் பேசிய பேச்சுக்களை மக்கள் ஏற்று கொண்டனர் , திரும்ப பேசமுடியாது என்றும், ஒரு செயலுக்கு ஒரு தண்டனை தான், தினம் தினம் தினம் தண்டனை கொடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். திக கட்சி மேடையில் தான் பேசியுள்ளார்.திமுக மேடையில் அல்ல.
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்து கொண்டது கண்டிக்கதக்கது. செல்வபெருந்தகைக்கு சம்மந்தம் இல்லை, நீதிமன்ற செல்லுங்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

6 months ago
67









English (US) ·