ARTICLE AD BOX
எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்து செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து, 10 நாட்களில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கலில் அவசர அவசரமாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டைன் வகித்த கட்சி பதவிகளை பறித்தார்.
அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கினார். மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து அதிரடி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், என்னை அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். தற்போது என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். எனக்கு அது மகிழ்ச்சியே.. இனி நான் மகிழ்ச்சியாக பயணிப்பேன் என கூறினார்.
