ARTICLE AD BOX
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை!
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன்,தற்போது ஓடிடி தளத்திலும் அபார வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இதையும் படியுங்க: ’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!
நடிகர் மணிகண்டன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து,ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியானது.எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும்,நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதால்,படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் வெற்றிப் பாதையில் பயணித்தது.
இந்த திரைப்படம் உலகளவில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி,அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.தமிழ் சினிமாவின் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக இது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி ZEE5 OTT தளத்தில் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 10, 2025தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இது கருதப்படுகிறது. குடும்பப் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.