ARTICLE AD BOX
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விழா
சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவகுமார் உட்பட அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பெற்ற மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் அகரம் அறக்கட்டளை மூலம் படித்து தங்களது வாழ்வில் முன்னேறிய மாணவர்கள் பலரும் சூர்யாவிற்கு தங்களது ஆழ்ந்த நன்றிகளை கூறினார்கள். இது பலரின் மனதை நெகிழவைத்தது. ஏழை மாணவர்கள் பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த சூர்யாவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தரிசனத்திற்குச் சென்ற சூர்யா
இந்த நிலையில் இன்று காலை சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்களது மகன் மற்றும் மகளுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடன் செல்ஃபி எடுக்கவும் அவர்களை புகைப்படம் எடுக்கவும் ரசிகர்கள் பலரும் முந்தியடித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ஜோதிகாவுடன் புகைப்படம் எடுக்க பின்னால் வந்துகொண்டே இருந்த நிலையில் அவரது கையை பிடித்து இழுத்து நிறுத்தி, “போதும்” என்று சற்று கோபமாக கூறினார்.
 மேலும் அவர், வெகு நேரமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து, “போதும், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருக்கிறோம். தொந்தரவு செய்யாதீர்கள். நிறைய புகைப்படங்கள் எடுத்துவிட்டீர்கள். திரும்பிச் செல்லுங்கள்” என பணிவோடு கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பலரும் ரசிகர்கள் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார்கள் என கொந்தளித்து வருகின்றனர்.
#suriya visits #Tirupati Temple with family pic.twitter.com/3qxhOuZpyg
— Shameena (@shameena_111) August 4, 2025
 
                        3 months ago
                                37
                    








                        English (US)  ·