ARTICLE AD BOX
குடும்ப உறுப்பினராக மாறிய மீடியா
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. அந்த தருணம் முதல் தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்தது வரையும் மீடியாக்கள் ஒவ்வொரு நிகழ்வையும் செய்திகளாக பகிர்ந்துகொண்டே வருகின்றனர். இது இணையவாசிகள் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போதும் ரோபோ ஷங்கர்…
“போதும் ரோபோ ஷங்கர், உங்க இம்சை தாங்கல. கதறும் மக்கள்:
விஜய் டிவியில் மிமிக்ரி செய்து பெயர் வாங்கினார் ரோபோ ஷங்கர். ஆனால் தனித்துவமாக காமெடி செய்யத் தெரியாதவர். தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுவதே காமெடி என நம்பி பல படங்களில் மொக்கை போட்டார். காலையில் கோழி கூவுற காமெடி ஒன்றுதான் இவருக்கான ஒரே அடையாளம்.
இவரது காமெடி எடுபடாததால் சிவகார்த்திகேயன் இவரை கழற்றிவிட்டார். அதன் பிறகு யூட்யூப் சேன்னல்கள் மொத்தமும் இவரை குத்தகைக்கு எடுத்துவிட்டனர். மருமகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அனைத்து வீடியோக்களிலும் தோன்றினர்.
கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணி நேரமும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக போட்டு அறுக்கிறார்கள். தற்போது இவர் தாத்தா ஆன பிறகும் இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது.
தயவு செய்து உங்கள் பேரனையாவது இந்த போலி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள். தாத்தா ஆன பிறகும் திருந்தாவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை” என தனது எக்ஸ் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

5 months ago
63









English (US) ·