போதை பொருள் வாங்கியது உறுதி? நடிகர் கிருஷ்ணாவை கைது செய்த போலீஸார்…

5 days ago 13
ARTICLE AD BOX

போலீஸ் வலையில் சிக்கிய கிருஷ்ணா

நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கிரை” என்ற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் அதிமுகவின் முன்னாள் IT Wing நிர்வாகியாக செயல்பட்டவர். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மதுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இவரை போலீஸார் கைது செய்தது. 

இவரை விசாரித்ததில் பிரதீப் என்பர் இவருக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி பிரசாத் தன்னிடம் கொக்கைன் வாங்கிச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.

அவரது இரத்தமாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து எழும்பூர் 14 ஆவது பெருநகர உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்ட நிலையில் கிருஷ்ணா தலைமறைவானதாக கூறப்பட்டது. சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை, அவர் கேரளாவில் இருப்பதாக தகவல் வெள்ளியானது. அதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் அவரை தேடி வந்தனர். எனினும் நடிகர் கிருஷ்ணா தனது வக்கீலுடன் ஆஜரான நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து அவரை விடிய விடிய விசாரித்தனர். 

actor krishna arrested by police in cocaine case

கிருஷ்ணா கைது

இந்த விசாரணையில் அவர், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் போதை பொருள் பயன்படுதியுள்ளாரா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்ததாக ஒரு தகவல் வெளிவந்தது.

எனினும் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரது மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப் உரையாடல்களை நோட்டமிட்டனர் போலீஸார். அதில் இந்த வழக்கில் கைதான நபர்களிடம் கிருஷ்ணா Code Word மூலமாக பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த Code Word குறித்து மேலும் விசாரணை நடத்திய நிலையில் போதை பொருள் சப்ளையர் கெவின் என்பவரிடம் கிருஷ்ணா போதை பொருள் வாங்கியதாக உறுதியானது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

  • actor krishna arrested by police in cocaine case போதை பொருள் வாங்கியது உறுதி? நடிகர் கிருஷ்ணாவை கைது செய்த போலீஸார்…
  • Continue Reading

    Read Entire Article