ARTICLE AD BOX
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் நம்ரதா சிகுருபதி. ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றிய நம்ரதா ஆறு மாதங்களுக்கு முன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார்.
இதையும் படியுங்க: போதும் ப்ரோ, உங்க இம்சை தாங்கமுடியல- ரோபோ ஷங்கருக்கு கும்பிடு போட்ட ப்ளூ சட்டை மாறன்?
முன்னதாக அடிக்கடி மும்பைக்கு பிரயாணம் செய்த அந்த பெண் மருத்துவர் அங்குள்ள பப் ஒன்றுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த போதைப் பொருள் வியாபாரி வன்ஷ்தாக்கர் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையான அவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் அளவிற்கு போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.
இது பற்றி அறிந்த ராயதுர்கம் போலீசார் மும்பையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி வன்ஷ் தாக்கரின் சப்ளையர் பாலகிருஷ்ணா அந்த பெண் டாக்டர் க்கு 53 கிராம் எடையுள்ள கொக்கைன் பொருளை சப்ளை செய்யும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 53 கிராம் கொக்கையின் போதை பொருள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பெண் மருத்துவர் நம்ரதா செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் மும்பையை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரியை அடிக்கடி தொடர்பு கொண்டு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 லட்சம் ரூபாய் அளவிற்கு போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

5 months ago
52









English (US) ·