ARTICLE AD BOX
போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் சிக்கியுள்ள நிலையில் வாண்டடாக வந்து சிக்கும் விதமாக பேசியுள்ளார் பிரபல நடிகர்.
விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளி வர உள்ளது. இந்தப் படத்திற்கான பிரமோஷன் பணிகளை தமிழக முழுவதும் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: கேம் சேஞ்சர் நான் எடுத்த தவறான முடிவு? கவலையின் உச்சத்தில் தயாரிப்பாளர்! அடப்பாவமே
இதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் மார்கன் திரைப்படத்திற்க்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணாவுக்கு போலீசார் தேடி வருகின்றனர் என்ற கேள்விக்கு.
என் பெயர் கூட வந்துள்ளது நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா. காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போதைப்பொருள் இருந்தது இப்போது இல்லை. நூறு வருடமாக இருக்கத்தான் செய்கிறது. சினிமா துறையில் மட்டும் உள்ளது எனக் கூற முடியாது.

அரசியல்வாதிகளுக்கு பற்றி சில குறைகள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.தவறுகள் இருந்தாலும் நல்லது செய்து கொண்டு தான் அரசியல் கட்சியினர் இருக்கின்றனர்.
மக்கள் நல்ல படம் என நினைத்தால் எந்த திரைப்படத்தை ஓட வைக்கலாம். திரைபடைத்த குறித்து விமர்சனம் செய்வார்கள் பணம் வாங்கத்தான் செய்கிறார்கள்.
பணம் கொடுக்காவிட்டால் படத்தை குறித்து தவறாக விமர்சனம் செய்வது இல்லை. அவர்களுக்கு பணம் கொடுப்பது உண்மைதான்.
தற்போது லாயர் திரைப்படத்தின் பணிகள் 50% முடிவடைந்து விட்டது. விரைவில் படத்தை எதிர்பார்க்கலாம். ஜென்டில்உமன் என்ற இயக்குனர் ஜோஸ்வா இப்படத்தை இயக்கிய வருகிறார் என தெரிவித்தார்.