ARTICLE AD BOX
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. கட்டுப்படுத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் சென்னையில் பிரபல நடிகர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: விஜய் பிறந்தநாளில் பட்டாகத்தியுடன் மோதிய தவெக நிர்வாகிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
அதிமுக ஐடி விங்கில் பணியாற்றிய பிரசாத் என்பவர் மதுபான விடுதி மோதல் விவகாரத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கினார். இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரசாத் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்,.
நுங்கம்பாக்கம் மதுபான விடுதி மோதல் வழக்கில் கைதான பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழதுங்கியதாக விசாரணையில் தெரியவந்ததால், நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்தனர்.
மேலும் மருத்துவ பரிசோதனையும் செய்தனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.