ARTICLE AD BOX
திருச்சி, சென்னை, கோவை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் போத்தீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பட்டுப் புடவைகள் மட்டுமே பிரதானமாக விற்பனை செய்து வந்த நிலையில்,தற்போது ஆயத்த ஆடைகள் துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் உணவுப் பொருட்கள்,
காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை 8 மணி அளவில் ஒரு காரில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கடை ஷட்டர்களை பூட்டி விட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அங்கு பணிபுரியும் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரத்தில் மேல புலிவார் ரோட்டில் ஜவுளிக்கடையும், சின்னக்கடை வீதியில் செயல்படும் போத்தீஸ் சொர்ண மகால்
நகை கடையும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
