போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

6 days ago 9
ARTICLE AD BOX

பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ்

தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தில் சிறுவர்களாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ்,தனித்துவமான நடிப்பிற்காக தேசிய விருதுகளை வென்றனர்.

இதையும் படியுங்க: டேய் யாருடா நீங்களா..நான் ‘ரோஹித் ஷர்மாவின்’ காதலியா..கடுப்பான விஜய் பட நடிகை.!

இப்படத்தில் சிறிய ‘காக்கா முட்டை’ கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ், அதன் பிறகு சில முக்கியமான படங்களில் நடித்தார்.மொட்ட சிவா கெட்ட சிவா,அறம்,பிழை,தமிழ் ராக்கர்ஸ் போன்ற திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.இருப்பினும்,தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

Ramesh emotional interview

சமீபத்திய பேட்டியில் ரமேஷ்,தன் வாழ்க்கையில் சந்தித்த சிரமங்களை பகிர்ந்துள்ளார். அதில் “நான் நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும்,அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை,மாடலிங் மீது எனக்கு ஆர்வம் இருந்தாலும்,வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒருமுறை, வேலைக்காக மெரினா பீச்சில் ஒரு அலுவலகத்திற்கு சென்று திரும்பி வர பஸ்ஸுக்கு கூட காசு இல்லை,அப்போ என்னுடைய அம்மா தான் எனக்கு உறுதுணையாக இருந்தாங்க,இப்போவும் அவுங்க தான் என்கூட சப்போர்ட்டா இருந்து,என்னை ஊக்கப்படுத்திட்டு இருகாங்க என்று ரொம்ப எமோஷனல் ஆக பேசியிருப்பார்.

  • Kaaka Muttai Ramesh போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!
  • Continue Reading

    Read Entire Article