ARTICLE AD BOX
போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான தொடர் போட்டிகள் நடந்து வந்தன. இதுவரை 73 போட்டிகள் நடந்துள்ளன,. மார்ச் 22ஆம் தேதி கோலகலமாக தொடங்கப்பட்ட நிலையில் பிளே ஆஃப் சுற்றுகளுக்கான போட்டிகள் நெருங்கி வந்தன.
இதையும் படியுங்க: பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டியை நிறுத்த போர் காரணம் இல்லையா? பிசிசிஐ புது விளக்கம்!
நேற்று நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாதியில் ரத்து செய்யப்பட்து. எல்லையில் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டதாக முதலில் கூறப்பட்டாலும், பின்னர் மின் தடை காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தொடரை ரத்து செய்வது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று காலை கூடியது. நாடு போரில் இருக்கும் போது கிரிக்கெட் தொடர் நல்லதல்ல என பிசிசிஐ அதிகாரிகள் கூறியதால், தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் சுவாரஸ்ய போட்டிகள் இனி தான் நடக்க இருந்தது. முதலில் 4 இடத்தை பிடிக்கும் அணி எது என ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது தொடர் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை அணி ரசிகர்கள் ஒரு பக்கம் நிம்மதியடைந்துள்ளனர்.