ARTICLE AD BOX
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து கொடுத்ததாக கூறி 6 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்து கரூர் நகர காவல் நிலைய போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதையும் படியுங்க: இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!
இன்று கரூர் நகர காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆதார் கார்ட் விண்ணப்பம், பான் கார்டு, லேப்டாப், செல்போன், அரசு மருத்துவரின் போலி முத்திரை உள்ளிட்டவைகளை செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தி இந்த குற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் மீது போலியாக அரசு ஆவணங்கள் தயார் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அதில் சம்ந்தப்பட்ட குற்றவாளிகளை எந்தெந்த இடங்களில் செயல்படும் ஜெராக்ஸ் கடைகளில் இது தயாரிக்கப்பட்டது என்பதனை காட்ட சொல்லி நகரின் மைய பகுதிகளான ராமகிருஷ்ணபுரம், வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடைகளுக்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சேகரிக்கும் பணியில் கரூர் நகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இந்த சோதனையின் காரணமாக கரூர் நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
