போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

3 months ago 36
ARTICLE AD BOX

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு போக்குவரத்து காவலராக ஆனந்த் (35) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடை அடுத்த மவுலிவாக்கம் ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லை.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்த ஆனந்த், இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆனந்த் மது அருந்துவிட்டு வந்து தகராறு செய்வது, வீடு, வாகனங்களை அடித்து உடைப்பது, குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஒருகட்டத்தில், அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, மாங்காடு போலீசார் கடந்த மாதம் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த், மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்துள்ளார்.

Policeman arrested in Chennai

மேலும், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அதே பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் திருமணம் செய்ய மறுக்கவே, ஆத்திரமடைந்த ஆனந்த், திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், இது குறித்து போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

இதில், திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து, ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Nayanthara to walk out of Mookuthi Amman 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!
  • Continue Reading

    Read Entire Article