மகனின் மார்பைப் பிளந்து தாய் செய்த காரியம்.. ஈரோட்டில் நடுங்க வைக்கும் கொலை!

1 month ago 32
ARTICLE AD BOX

ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கதவணை நீர்நிலையம் அருகே ஜல்லி கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. அதோடு, அவரது வயிறு மற்றும் மார்பைப் பிளந்து கற்களைச் சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சடலமாக மீட்கப்பட்ட நபர் பவானி தொட்டிபாளையத்தைச் சேர்ந்த மதியழகன் ஆவார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இவர் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், போதைக்கு அடிமையான மதியழகன், தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதால் கிருத்திகா தற்கொலை செய்துள்ளார்.

Erode murder

இவ்வாறு மனைவி இறந்த பிறகு மதியழகன் தனது தாய் சுதா, தம்பி முருகானந்தம் ஆகியோரை அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த வகையில், கடந்த மார்ச் 11ஆம் தேதி போதையில் தகராறு செய்த மதியழகனை சுதா, முருகானந்தம், அவரது நண்பர் கௌரி சங்கர் மற்றும் கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் இணைந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: போலீசே ஆதரவு.. என்ன கொலை செஞ்சிடுவாங்க.. ஜாகீர் உசேன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

அதன் பிறகு, அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆற்றில் வீசினால் அவர் உடல் தண்ணீரில் மிதக்காத வண்ணம் வயிற்றைக் கிழித்தும், மார்பைப் பிளந்தும் கற்களை வைத்து கட்டியுள்ளனர். அதன் பிறகு, காவேரி ஆற்றில் ஜல்லிகல்மேடு பகுதியில் வீசிவிட்டு, அவரவர் வீட்டிற்குச் சென்று இருந்துள்ளனர். இந்த நிலையில், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சுதா, முருகானந்தம் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Arjith Shankar Hero Debut ஹீரோவாக களமிறங்கும் சங்கர் மகன்…கம்பேக் கொடுப்பாரா விஜய் பட இயக்குனர்.!
  • Continue Reading

    Read Entire Article