மகளின் தோழிகளைப் பார்க்க ஆசைப்பட்ட தந்தை.. டாக்ஸி டிரைவர் சிறை சென்ற பகீர் பின்னணி!

1 month ago 48
ARTICLE AD BOX

கேரளாவில், தனது வளர்ப்பு மகளின் தோழிகளையும் பாலியல் அத்துமீறலுக்கு அழைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ் (38). இவர் டாக்ஸி ஓட்டுநர் ஆவார். இந்த நிலையில், இவருக்கும் குறுப்பம்படி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனேஷின் டாக்ஸியை வாடகைக்கு அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் கணவர் உயிரிழந்துவிட்டார். இதனால், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணுடன் தனேஷ் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த வகையில், அந்தப் பெண்ணின் மகள்களான 10 மற்றும் 12 வயதான சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் தனேஷ்.

இதனிடையே, 12 வயது சிறுமியின் பேஸ்புக் கணக்கைப் பார்த்த தனேஷ், அதில் நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்த சில சிறுமிகளின் புகைப்படங்களைச் சேகரித்துள்ளார். அவற்றில், சிறுமியுடன் படிக்கும் மாணவிகள் சிலரின் புகைப்படங்களைக் காட்டி அவர்களை வீட்டுக்கு அழைத்துவரும்படிக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, ஒரு கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட மாணவியிடம் கொடுத்துள்ளார்.

Taxi driver arrested in Kerala

அந்தக் கடிதத்தில், ‘எனது அப்பா உன்னைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்’ என எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை வீட்டுக்கு கொண்டு சென்று தனது அம்மாவிடம் காட்டியுள்ளார் அந்த மாணவி. மேலும், அந்த மாணவியின் அம்மா அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால், அவருக்கு அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத.. கூட்டணி கணக்கு? இபிஎஸ் கடும் விமர்சனம்!

எனவே, அந்தக் கடிதத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து, 10 மற்றும் 12 வயதுள்ள சிறுமிகளை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, டாக்ஸி டிரைவரால் அந்த சிறுமிகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தனேஷ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். மேலும், இதில் சிறுமிகளின் தாய்க்கு பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telugu actors gambling app case நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!
  • Continue Reading

    Read Entire Article