மகளிர் தினத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

6 days ago 8
ARTICLE AD BOX

சென்னையில், இன்று (மார்ச் 8) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold and Silver rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 8) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு? தீராத வலி : துடிதுடித்து போன உயிர்.. வைரலாகும் பதிவு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 771 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Raadhika Sarathkumar Post Viral on Net நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு? தீராத வலி : துடிதுடித்து போன உயிர்.. வைரலாகும் பதிவு!
  • Continue Reading

    Read Entire Article