ARTICLE AD BOX
கள்ளக்காதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வரும் சூழலில், மருமகனுடன் மாமியார் ஒட்டம் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜூ என்பவர் தனது மனைவி இறந்துவிட்டதால் சாரதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வசித்து வருகிறார்.
முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதையடுத்து நாகராஜ் மூத்த மகள் ஹேமாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தனது தங்கை மகனான கணேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு மன் கணேஷ் வெளியே செல்லலாம் என ஹேமாவை அழைத்து சென்ற நிலையில், திடீரென கணேஷ் மட்டும் மாயமாகினார். எங்கும் தேடியும் கிடைக்காததால் ஹேமா வீட்டுக்கு திரும்பினார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, தனது தாய் சாரதாவையும் காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் எல்லாம் மாயமானது.
பின்னர் தான் தனது தாய் சாரதாவுடன் கணவர் வீட்டை ஒடியது தெரிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பே கணேஷ் உடன் சாரதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
மூத்த மகளுக்கு கணேஷை திருமணம் செய்து வைத்துவிட்டால், தனது தகாத உறவை தொடர்ந்து கொள்ளலாம் என எண்ணிய சாரதா தனது கணவரிடம் ஹேமாவுக்கு மாப்பிள்ளை வரன் உள்ளதாக கூறியுள்ளார்.

நாகராஜூம் தங்கையின் மகன்தானே நல்ல பொருத்தம் என ஒப்புக்கொண்டார். திருமணமானவுடன் ஹேமா, கணேஷின் செல்போனை அவ்வப்போது பார்ப்பாராம். அப்படி ஒரு நாள் பார்க்கும் போது, தனது கணவனுடன் தாய் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து கணேஷ் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தெரிந்துவிடும் என நினைத்த கணேஷ், தனது மாமியார் சாரதாவிடம் இது குறித்து கூறிய அவர், வீட்டை விட்டு ஓட முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி ஹேமாவை வெளியில் கூட்டி செல்வது போல நடித்து, மாமியாருடன் மாயமாகினார். இது குறித்து சாரதாவின் கணவர் நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.