மகிழ்வித்து மகிழ்… கோவையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த 50 வகையான போட்டி!!

3 months ago 34
ARTICLE AD BOX

கோவை வைசியாள் வீதி பகுதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இதன் கும்பாபிஷேக பெருவிழா மற்றும் மண்டல பூஜை கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: கால்ல கூட விழறோம்.. தயவு செய்து எங்களை கட்சியில் சேர்த்துக்கோங்க : இபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை!

கும்பாபிஷேக விழாக்கு பிறகு தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது இந்த 48 நாளும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் பன்னிரண்டாவது நாளான நேற்று ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் என்ற விளையாட்டு போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

கோயிலின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 வகையான போட்டிகள் மற்றும் இரண்டு மெகா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை 3 வயது வியானிகா வெங்கடேஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராணி விஜயகுமார், மகேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

  • Rishab shetty announced wrap on kantara chapter 1 movie அவ்வளவுதான்; எல்லாரும் கிளம்புங்க- காந்தாரா 2 படத்துக்கு கும்புடு போட்ட ரிஷப் ஷெட்டி?
  • Continue Reading

    Read Entire Article