மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?

23 hours ago 4
ARTICLE AD BOX

அறக்கட்டளைக்கு பத்து கோடி

நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இப்போது வரை இந்த அறக்கட்டளையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் படித்து முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று “ரெட்ரோ” திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

some netizens criticizing that suriya donate 10 crore to agaram because of negative review for retro

இவ்விழாவில் “ரெட்ரோ” திரைப்படத்தின் மூலம் கிடைத்த வசூலில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா. சூர்யாவின் இச்செயல் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். 

நெகட்டிவ் விமர்சனங்கள்…

எனினும் சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு எதிராக பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில் அவர் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி அளித்ததற்கு பின்னணியாக ஒரு காரணத்தை கூறுகின்றனர். அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தின் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

ஆதலால் இதனை திசைதிருப்பவே சூர்யா ரூ.10 கோடியை அறக்கட்டளைக்கு தந்துள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர். எனினும் சூர்யா செய்த செயலில் குறை கண்டுபிடிக்காமல் அவரை முழு மனதோடு பாராட்ட வேண்டும் என சூர்யாவுக்கு ஒரு பக்கம் ஆதரவு கரங்கள் நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

  • some netizens criticizing that suriya donate 10 crore to agaram because of negative review for retro மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?
  • Continue Reading

    Read Entire Article