மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

3 months ago 44
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும் கோபத்தில் பதிலளித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

2025 ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்டீபன் பிளெமிங் கலந்து கொண்டார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் “முதல் போட்டியில் 156 என்ற இலக்கை 20 ஓவர்கள் முழுவதும் பயன்படுத்தி சேஸிங் செய்தீர்கள்.இன்றைய போட்டியில் 146 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறீர்கள்.இது உங்கள் அணியின் கிரிக்கெட் ஆட்டபோக்கு என தெரிகிறது.ஆனால் இது ஒரு பழைய முறை அல்லவா?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டவுடன் ஸ்டீபன் பிளெமிங் வெளிப்படையாகக் கோபம் கொண்டார்.அவர் “என்னுடைய ஆட்ட முறை என்றால் என்ன?” என்று எதிர்கேள்வி எழுப்பினார்.அதன்பின் அவர் தொடர்ந்துப் பேசும்போது “நாங்கள் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்களைக் கொண்டுள்ளோம்.நீங்கள் சொல்வது போல் நாங்கள் குறைவாக ரன்கள் எடுத்திருந்தாலும்,அதிர்ஷ்டம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை” என்றார்.

அந்த பத்திரிக்கையாளர் “நான் உங்களை விமர்சிக்கவில்லை” என்று விளக்கம் அளிக்க முயன்றாலும்,ஸ்டீபன் பிளெமிங் கோபமாக “நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்.இது முட்டாள்தனமான கேள்வி” என்று கூறினார்.

இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!
  • Continue Reading

    Read Entire Article