ARTICLE AD BOX
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் காலை 9 மணி முதல் காட்சிக்கு திரையரங்குகள் விழா கோலம் பூண்டது.
மணிரத்னம்-கமல்ஹாசன் காம்போவில் “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து “தக் லைஃப” திரைப்படம் வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. எனினும் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரது கருத்தையும் பார்க்கும்போது இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
இத்திரைப்படத்தை பார்த்த பலரும் டிவிட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்….
படம் பார்த்த ஒருவர், “கமல்ஹாசனும் சிம்புவும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி சரி இல்லை. மணிரத்னம் என்ற Trademark எங்கேயும் காணவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
மற்றொருவர் “செக்க சிவந்த வானம் திரைப்படம் போல இருக்கிறது. கிளைமேக்ஸிற்கு முந்தைய காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. திரிஷாவின் கதாப்பாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அருமையாக உள்ளது. 10க்கு 7.5 மார்க்குகள் தரலாம் என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், “காலாவதியான கதையை வைத்து யூகிக்கக்கூடிய திரைக்கதையுடன் படம் எடுத்திருக்கிறார் மணிரத்னம்” என்று விமர்சித்துள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் டிவிட்டரில் வந்துகொண்டிருக்கின்றன. எனினும் வார இறுதி நாட்களில்தான் அதிக ரசிகர்கள் திரையரங்குகளில் கூடுவார்கள் என்பதால் இத்திரைப்படம் வெற்றிப்படமா அல்லது தோல்விபடமா என பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
#ThugLife had potential but ends up dragging.
Kamal Haasan delivers a solid performance, but his never-ending monologues wear you down. Simbu handles his part well, but even that can’t rescue the sluggish, flat second half. The trademark Mani Ratnam spark? Nowhere to be found.… pic.twitter.com/KdA4aqrJiV
#ThugLife ~ Turd Life 💩 Predictable gangster saga by Mani Ratnam with an Outdated story by Kamal Haasan & an Ineffective score by ARR. What works is the good De-aging work in the beginning, and the rest is big blunder.🥱👎 (1☆/5) pic.twitter.com/gpU7hin9k1
— Prince Prithvi (@PrincePrithvi) June 5, 2025 — Bullet ® (@ZenxTamils) June 5, 2025#ThugLife first ever review
Blockbuster 👌👌. As usual maniratnam narration like CCV. Conversation between sim u and kamal in pre climax was nice. Trisha character is different and bold attempt.. finally thalaivan ARR bgm 🔥🔥
Kollywood tweet rating- 7.5/10 pic.twitter.com/AsXDGKYjkQ
Mani Ratnam’s *Thug Life* is a gritty gangster saga with his signature flair. Kamal Haasan and Silambarasan TR deliver electrifying performances, backed by AR Rahman’s brilliant score and Ravi K. Chandran’s stunning visuals. A solid genre entry, though not flawless. #thuglife pic.twitter.com/hxQaXwMkW8
— Tha Cinema (@tha_cinema) June 5, 2025