ARTICLE AD BOX
லிட்டில் சூப்பர் ஸ்டார்
நடிகர் சிலம்பரசன் கைக்குழந்தையாக இருந்தபோதே திரைப்படங்களில் தோன்றியவர். அவரது தந்தையாரான டி.ராஜேந்தர் இயக்கி நடித்த பல திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இவ்வாறு சிறு வயதில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சிம்பு. இவர் சிறுவனாக இருந்தபோதே இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினர். குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே அந்தளவுக்கு பிரபலமாக இருந்தார்.
குமுறி குமுறி அழுத சிம்பு
இந்த நிலையில் சமீபத்தில் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, மணிரத்னம் தன்னை நடிக்க அழைக்கவில்லை என்று குமுறி குமுறி அழுத சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“மணி சார் அஞ்சலி என்று ஒரு படம் எடுத்தார். அந்த படம் முழுவதும் சிறுவர்கள் பலர் நடித்திருப்பார்கள். அதில் அஞ்சலி பாப்பாவின் சகோதரனாக ஒரு தெலுங்கு நடிகர் நடித்திருந்தார். நான் அந்த படம் பார்த்துவிட்டு வீட்டில் அழுகத்தொடங்கிவிட்டேன். ‘ஏன் என்னை மணிசார் நடிக்க கூப்பிடவில்லை. நானும் சிறுவன்தானே. நான் இங்கேதானே நடித்துக்கொண்டிருக்கிறேன்’ என அழுதேன். அதற்கு, ‘அந்த படத்திற்கேற்றார் போல் நடிகரை தேர்வு செய்திருந்திருப்பார்கள்” என்று கூறி வீட்டில் என்னை ஆறுதல் படுத்தினார்கள்” என தான் அழுத சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 months ago
49









English (US) ·