ARTICLE AD BOX
பூஜா ஹெக்டே காட்டுல மழை என்றெ சொல்லாலாம். காரணம் 2012ல் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகமான பூஜா ஹெக்டேவின் முதல் படமே தமிழில் வெளியான முகமூடிதான்.
ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் வாய்ப்புகள் கொட்டியது. கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து மீண்டும் தமிழ் படம் வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் தளபதி விஜய்யுடன் இணைந்தார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இந்த ஜோடிக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இந்தியில் பிஸியான பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் ஜனநாயகன், தொடர்ந்து சூர்யாவுடன் ரெட்ரோ, காஞ்சனா 4. ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியாகி இளைஞர்களின் வைப் ஆக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.
இவர் நடனத்தில் கைதேர்ந்தவர் என்பதாலும், எக்ஸ்பிரசனில் ராணி என்பதாலும் தினமும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே போகிறது.