ARTICLE AD BOX
பிக்பாஸ் ஜோடி
தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “ரெட்டை வால் குருவி” என்ற தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மேலும் “பாசமலர்” (சன் டிவி), “சின்ன தம்பி” (விஜய் டிவி) போன்ற பல தொடர்களில் நடித்து வந்த இவர், “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் அமீர். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அமீர் ஒரு டான்சர் ஆவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்தே பாவனியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பாவனியும் அமீருக்கு ஓகே சொல்ல, இருவரும் லிவ் இன் உறவில் இருந்தனர்.
திடீர் திருமணம்
இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் திடீரென கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். விஜய் டிவி பிரியங்கா தாலி எடுத்துக்கொடுத்து இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாக ஆனது.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசியபோது அமீர்-பாவனி திருமணத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது திருமணத்திற்கு சம்மதிக்க பாவனி அமீரிடம் ஒரு நிபந்தனை போட்டாராம். அதாவது தன்னை மதம் மாறும்படி நிர்பந்திக்கக் கூடாது என்ற கூறினாராம். இதற்கு அமீரும் ஓகே என்று சொன்னதால்தான் பாவனி திருமணத்திற்கு சம்மதித்தாராம்.
சில நாட்களாகவே அமீர் பாவனியை மதம் மாறச்சொன்னதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என பயில்வான் ரங்கநாதன்ன் கூறிய தகவலில் இருந்து தெரிய வருகிறது.