ARTICLE AD BOX
மதிமுக கட்சி கொடிகளை தலையை சுற்றி தூக்கி வீசிய நிர்வாகிகளால் பரபரப்பு.
மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவை துரோகி என வைகோ அண்மையில் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கட்சிக்குள்ளேயே எழுந்தன.
இதையும் படியுங்க: 8 வயது சிறுமிக்கு நடந்த கோரம்.. நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மக்கள் போராட்டம்!
மல்லை சத்யாவும் கடும் எதிர்ப்பு பதிவு செய்து வைகோவுக்கு உருக்கமான கடிதமும் எழுதியிருந்தார். இந்த நிலையில் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகள் தங்களது வாகனங்களில் இருந்த மதிமுக கொடியை தலையை சுற்றி வீசினர்.
மகன் துரை வைகோவுக்காக மல்லை சத்யாவை துரோகி பட்டம் கட்டியவர் வைகோ என்றும், துரை வைகோவுக்கு முடி சூட்ட வைகோ பிளான் என கோஷங்கள் எழுப்னிர் மேலும் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்தனர்.
Tags: mallai sathya, mdmk, Politics, அரசியல், மல்லை சத்யா

5 months ago
55









English (US) ·