ARTICLE AD BOX
சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல் பிரிவில் பயிலும் அருள் குமரன் (வயது 17), குருமூர்த்தி (வயது 17) ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அரசியல் அறிவுப் பிரிவு ஆசிரியர் சண்முகசுந்தரம் இரு மாணவர்களையும் தடுத்து நிறுத்தி ஏன் மது அருந்தி வந்தீர்கள் உங்கள் இருவரை பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இரு மாணவர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த இரு வேறு மது பாட்டில்களை கொண்டு ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்து வந்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் மது போதையில் ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய இருவரையும் பிடித்து வகுப்பறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த ஆண்டு நடந்த 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் ஆசிரியர் சண்முகசுந்தரம் செய்முறை தேர்வு மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைத்ததாகவும் இதனால் மன உளைச்சலடைந்த தாங்கள் ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க வேண்டும் என திட்டமிட்டதாகவும் அதன் அடிப்படையில் இன்று இருவரும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 2 மாணவர்களையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இதே பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் ஒருவர் புத்தகப் பையில் மறைத்து வைத்து கொண்டு வந்த அறிவாலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது

அரசு பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்கள் மதுபோதையில் ஆசிரியரை மது பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
