ARTICLE AD BOX
டாப் நடிகை
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருபவர்தான் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தற்போது ஹிந்தியில் “ரோமியோ”, “ரேஞ்சர்”, “ஐபிஎஸ் மரியா”, “வ்வான்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகை தமன்னா “Wite & Gold” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதுபான ஊழலில் நடந்த மோசடி பணத்தின் மூலம் தனது நிறுவனத்திற்காக தமன்னா 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

விசாரணை வளையத்தில் தமன்னா
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மதுபான விற்பனையில் ரூ.3500 கோடி ஊழல் நடந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த 11 பேரில் ஆந்திராவின் முன்னாள் எம் எல் ஏ பாஸ்கர் ரெட்டியும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடுவும் அடங்கும். இந்த நிலையில் வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த மதுபான மோசடி விவகாரத்தில் தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. அதாவது இந்த மோசடி பணத்தின் மூலம் தமன்னாவுக்கு சொந்தமான “Wite & Gold” நிறுவனம் 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபான ஊழல் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா? அதிர்ச்சியில் திரையுலகம்…

2 months ago
25









English (US) ·