ARTICLE AD BOX
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட விச் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு காவல் நிலையத்தில் இருந்த காவலரை பிரபல கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சென்று காவல் நிலையத்தை சூறையாடி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனை செய்ய வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் இல்லாததால் அவரது தந்தையை காவல்துறையினர் விசாரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
தான் வீட்டில் இல்லாத போது காவல்துறையினர் அத்துமீறி உள்ளே நுழைந்து., தனது தந்தையை மிரட்டியதாக கூறி கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு பணியில் இருந்த காவலரை மிரட்டிய நிலையில் காவலர் தப்பி அங்கு உள்ள அறையில் பூட்டிக் கொண்டுள்ளார்.
 தொடர்ந்து., ஆத்திரமடைந்த போராளி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் காவல் நிலையத்தை உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்து தப்பித்தார்.
இந்நிலையில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் சம்பவம் அறிந்து காவல் நிலையத்தை சென்று பார்வையிட முற்பட்டபோது பேரையூர் காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 சம்பவம் அறிந்து காவல்துறை தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா மற்றும் எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
 
                        4 months ago
                                51
                    








                        English (US)  ·