ARTICLE AD BOX
வனிதா விஜயகுமாருக்கு இளையராஜா நோட்டீஸ்
வனிதா விஜயகுமார் நடித்து இயக்கிய “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படத்தில் தான் இசையமைத்த “சிவராத்திரி” என்ற பாடல் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் இருந்து தனது பாடலை நீக்குமாறும் முறையிட்டிருந்தார். இந்த வழக்கில் வனிதா விஜயகுமார் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தவங்களுக்கு ஒரு நியாமம், வனிதாவுக்கு ஒரு நியாயமா?
இவ்வழக்கு குறித்து பேசிய வனிதா விஜயகுமார், தான் நேரில் சென்று இளையராஜாவிடம் பேசி அனுமதி பெற்ற பிறகே அப்பாடலை பயன்படுத்தியதாக கூறினார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, “குட் பேட் அக்லி பெரிய பட்ஜெட் திரைப்படம். அதற்கு இளையராஜா ராயல்டி கேட்டது சரியானது. ஆனால் வனிதா விஜயகுமார் எடுத்தது சிறிய பட்ஜெட் திரைப்படம். இதற்கு நோட்டீஸ் அனுப்பினால் நியாயமா? “ என கேள்வி எழுப்பியிருந்த அவர்,

“தண்ணீ கருத்திருச்சு என்ற பாடலை பயன்படுத்திக்கொள்ளலாமா? என மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு கேட்டதற்கு ‘யார் யாரோ பயன்படுத்துறாங்க, நீ என் தம்பி மகன்தானே பயன்படுத்திக்கோ’ என கூறினாராம் இளையராஜா. அப்படி இருக்க வனிதாவிடம் மட்டும் வாய்மொழியாக சொல்லிவிட்டு நோட்டீஸ் அனுப்பியது ஏன்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
