ARTICLE AD BOX
திருச்சி , கே.கே. நகரில் மாநகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா அமைச்சர் கே .என் .நேரு தலைமையில் நடைபெற்றது. இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.
இதையும் படியுங்க: மைனர் பெண்ணை கடத்தி தாலி கட்டிய 20 வயது இளைஞர்.. அணைக்கட்டு பகுதியில் அடுத்து நடந்த ஷாக்!
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை ஏற்று தகுதியில்ல விண்ணப்பதாரர்களுக்கு பட்டாக்கள் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் (K.N.நேரு உங்கள் தொகுதிக்கு மாற்றிக் கொள்வதாக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி குற்றச்சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு, அவர் கூறுவதில் உண்மை இல்லை அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது.
திமுக கூட்டணியின் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியை அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வரும் என பாஜக அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள்.
இதுவரை அவர்களால் (அதிமுக) தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை.
எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை இணைக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் .அவரது எண்ணம் நிறைவேறாது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றனரே ? என்ற கேள்விக்கு இதனை எங்கள் தலைவர் (ஸ்டாலின்) பார்த்துக் கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது என தெரிவித்தார்.