ARTICLE AD BOX
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான படம் மதராஸி. இந்த படம் அவருக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்தால் எதிர்பார்ப்பு எகிறியது. அதே போல அனிருத் இசையமைத்தால் ரசிகர்கள் உற்சாகமாகினர். கஜினி படத்தை போல ஒன்லைன் இருந்தாலும், காதலிக்காக சிவகார்த்திகேயன் மெனக்கெடும் காட்சிகள் அருமை.
இருப்பினும் திரைக்கதை சுமார் என்பதால் படம் வெளியான 4வது நாளில் வசூல் மந்தமாகியது. அனிருத் இசையில் பாடல்கள் சொதப்பினாலும், பின்னணி இசை கைக்கொடுத்திருந்தது.

ருக்மணி வசந்த் காதலும், வித்யுத் ஜம்வாலின் மிரட்டலும் படத்ற்கு வலு சேர்த்தது. முதல் நாள் வரவேற்பு கிடைத்தாலும், பின்னர் கலவையான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், சுமார் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.180 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் இனி வரும் நாட்களில் எத்தனை வசூல் செய்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
