மன உளைச்சலில் இருக்கிறேன்.. அரசியலே வேண்டாம் என தோன்றுகிறது : எம்எல்ஏ விரக்தி!

1 month ago 27
ARTICLE AD BOX

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சித் தலைமைக்கு தேவையான பண்பும் பக்குவமும் அன்புமணிக்கு இல்லை எனவும் குறை கூறினார்.

இதையும் படியுங்க: நாடாளுமன்ற புலி வைகோதான்… எம்பி பதவி கிடைக்காததால் கூட்டணி முறிவு? துரை வைகோ கருத்து!

இது அன்புமணி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்சியில் நிலவும் சூழல் காரணமாக தாங்க முடியாத மன உளைச்சலில் இருக்கிறேன். கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

I am in a state of depression.. I feel like I don't want to be in politics at all Says PMK MLA

அரசியலையே விட்டுவிடலாம் எனும் அளவுக்கு மன அழுத்தத்தில் உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக நான் எப்போதும் கூறவில்லை. பா.ம.க.வில் உள்ள ஒவ்வொருவரும் தீவிர மன அழுத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர் என கூறினார்.

  • maniratnam will direct new movie again with simbu after thug life “தக் லைஃப்” வெளியான உடனே இது பண்ணனும்- மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவால் மிரண்டுபோன ரசிகர்கள்?
  • Continue Reading

    Read Entire Article