ARTICLE AD BOX
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்.
கடவுள் ராமர் என்பதால் ராமரை காண செல்கிறேன். எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.
இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன. அமித் ஷா மோடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு நான் காண செல்வது கடவுள் ராமரைத் தான்.
9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக சொன்னோர்களே என்ற கேள்விக்கு அபப்டி ஒன்றும் இல்லை. கோவில் போய் அமைதியாக இருக்கலாம் என்கிறிருக்கிறேன்
நான் சொன்னதுக்கு மாறுபட்ட கருத்து யாரும் சொல்ல வில்லை அனைவரது மனதிலும் உள்ளது. பொதுச் செயலாளர் எடுக்கும் முடிவுக்கு நான் கருத்து சொல்ல இயலாது. ஹரித்துவார் கோவிலில் ராமரை காண செல்கிறேன்.
தொண்டர் மன நிலை நான் சொல்வது சரி என்பதால் கமெண்ட் இல்லை. தொண்டர்கள் ஆதர்வு தெரிவித்து செல்கின்றனர். இரண்டு நாட்களில் பத்தாயிரம் பேர் சந்தித்து உள்ளேன். மூத்த தலைவர்கள் சந்தித்தனரா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.

3 months ago
44









English (US) ·