மனித தன்மையே இல்லாத இயக்குனர்? அவர் செஞ்ச ஒரு விஷயம்? பாலா குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்!

1 month ago 20
ARTICLE AD BOX

குரூரமான இயக்குனர்?

இயக்குனர் பாலா என்றாலே பலருக்கும் ஞாபகம் வரும் வீடியோ, “பரதேசி” படப்பிடிப்புத் தளத்தில் பாலா நடிகர்களை மூர்க்கமாக அடிக்கும் வீடியோதான். பாலா இப்படிப்பட்ட குரூரமான இயக்குனரா? என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர். இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்துகொள்ளக்கூடிய இயக்குனரா இவர்? என பலரும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இயக்குனர் பாலாவை குறித்து பிரபல நடிகர் சரவணன் ஒரு பேட்டியில் பேசிய அனுபவங்கள் பலரின் கவனத்தை குவித்துள்ளது.

Actor saravanan said about director bala in good aspect

பாலா செய்த அந்த விஷயம்?

“பாலா ஒரு அருமையான இயக்குனர். அவரை போன்ற ஒரு இயக்குனர் உலகத்திலேயே இல்லை என கூறுவேன். ஒரு நடிகனை மிகவும் ஈஸியாக நடிக்க வைத்துவிடுவார் அவர். மனிதத்தன்மையுடைய இயக்குனர் அவர். மனிதத்தன்மையே இல்லாத இயக்குனர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி இல்லாமல்,பாலா மிகவும் மனிதத்தன்மையுடைய ஆள். 

நந்தா பட படப்பிடிப்பிற்காக இராமேஸ்வரம் சென்றபோது முதல் நாள் ஒரு ஹோட்டலில் என்னை தங்க வைத்திருந்தனர். இராமேஸ்வரம் சுற்றுலாத்தளம் என்பதால் ஹோட்டல்கள் முன்ன பின்னேதான் இருக்கும். அந்த ஹோட்டலில் நான் ஒரு அறையில் இருந்தேன். அப்போது இயக்குனர் பாலா அந்த அறைக்குள் வந்தார். அறையெல்லாம் உங்களுக்கு ஓகேவா? என  கேட்டார்.

Actor saravanan said about director bala in good aspect

நான் ஓகேதான் என்று சொன்னேன். ஆனால் அவர் அறையை கவனித்துவிட்டு வெளியே சென்றவர், எனக்கு வேறு ஒரு டிராவலர்ஸ் பங்களாவில் ஒரு அறை எடுத்துக்கொடுத்தார். இதை செய்ய அவருக்கு அவசியமே கிடையாது. ஆனாலும் அதை செய்தார். அந்தளவுக்கு சிறந்தவர்” என்று நடிகர் சரவணன் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Actor saravanan said about director bala in good aspect மனித தன்மையே இல்லாத இயக்குனர்? அவர் செஞ்ச ஒரு விஷயம்? பாலா குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Continue Reading

    Read Entire Article