மனைவி தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்… நடுக்காட்டில் நடந்த மர்மம்..!!

3 weeks ago 20
ARTICLE AD BOX

குடும்பத் தகராறினால் மனைவியை வெட்டி தலையுடன் போலீஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்தார்.

இலங்கை வவுனியா, புலியகுளம் பகுதியில் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று காலை புளியங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Husband Killed and came to the police station with his wife's head

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து போலீசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • karnataka film chamber wants to release thug life movie நீதிமன்றம் கிடக்குது, நீங்க வாங்க கமல் சார்- தக் லைஃப் படத்தை வெளியிட ஆர்வம் காட்டும் கர்நாடகா பிலிம் சேம்பர்!
  • Continue Reading

    Read Entire Article