மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!

4 days ago 12
ARTICLE AD BOX

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு சென்றவர் நடிகர் கவுண்டமணி. மூத்த புகழ்பெற்ற காமெடி நடிகரான இவருக்கு வயது 85.

இதையும் படியுங்க: நடிப்புக்கு டாட்டா காட்டும் ரஜினிகாந்த்? லதா ரஜினிகாந்த் சொன்ன தீடீர் தகவல்…

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஆட்சிய செய்து வரும் கவுண்டமணி, பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் ரஜினி, கமல் என அன்றைய நட்சத்திரம் முதல் இன்றைய இளம் தலைமுறை டிகர்கள் வரை இணைந்து காமெடியில் கலக்கிய அவர், செந்திலுடன் இணைந்து செய்த காமெடி இன்ளறவும் டிரெண்டிங்கில் உள்ளது.

அப்போதே காதல் திருமணம் செய்தவர் கவுண்டமணி. சாந்தி என்பவரை திருமணம் செய்த கவுண்டமணிக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

Comedy Actor Goundamani Wife's sudden death

சாந்தியின் மறைவால் குடும்பமே சோகத்தில் உள்ளது. இவர் மறைவை அடுத்து பிரபலங்கள் தங்கள் ஆறுதலை கூறி வருகின்றனர். சாந்தியின் தேனாம்பேட்டையில் உள்ள அரவது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலிக்காக வருகை தந்துள்ளனர். இறுதிச்சடங்கு இன்று மாலை அல்லது நாளை நடக்கும் என கூறப்படுகிறது.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!
  • Continue Reading

    Read Entire Article