ARTICLE AD BOX
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் இத்திரைப்படத்திற்கான புரொமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கும்போதே உயிரே,உறவே, தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என பேசியிருந்தார்.
மன்னிப்பு கேட்க முடியாது
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகா மாநிலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளம்பியது. கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் திரைப்படம் தடை செய்யப்படும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியுள்ளார்.

5 months ago
75









English (US) ·