ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்கமாட்டேன்
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து அவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கும்போதே உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என பேசியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகள் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என கண்டனம் தெரிவித்தார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என பல கன்னட அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய கமல்ஹாசன், “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என கூறினார்.
எவ்வளவு நஷ்டம்?
“தக் லைஃப்” திரைப்படத்தின் கர்நாடக மாநில வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் என்பவர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளாராம். அந்த வகையில் ஒரு வேளை இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாத பட்சத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. எனினும் கமல்ஹாசன் அந்த நஷ்டத்தை தாங்க தயாராக உள்ளதாகவும் ஆனால் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை எனவும் சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

5 months ago
55









English (US) ·