மன்னிப்பு வேணும்னு கேட்டியாமே- கன்னட மொழி விவகாரத்தில் ஆக்சனில் இறங்கிய கமல்ஹாசன்? 

4 weeks ago 25
ARTICLE AD BOX

மன்னிப்பு கேட்க முடியாது

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கூறினார். இவர் இவ்வாறு கூறியது கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. அங்குள்ள கன்னட அமைப்புகள், அரசியல்வாதிகள் என பலரும் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில் கர்நாடகா பிலிம் சேம்பர் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. 

kamal haasan give petition against the ban of thug life movie in karnataka

நீதிமன்ற படிகளை ஏறிய கமல்ஹாசன்

இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட கர்நாடக அரசு, காவல்துறை மற்றும் கர்நாடக பிலிம் சேம்பர் ஆகியோர் தடை விதிக்கக்கூடாது என ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் சார்பாக கமல்ஹாசன் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் “தக் லைஃப்” திரைப்படம் திரையரங்குகளில் தங்கு தடையின்றி வெளியாகவும் அத்திரைப்படம் வெளியாகும்போது போதுமான பாதுகாப்பும் வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • kamal haasan give petition against the ban of thug life movie in karnataka மன்னிப்பு வேணும்னு கேட்டியாமே- கன்னட மொழி விவகாரத்தில் ஆக்சனில் இறங்கிய கமல்ஹாசன்? 
  • Continue Reading

    Read Entire Article