ARTICLE AD BOX
முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் மாநில பொருளாளர் எல்கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு, சக மனிதரை இன்னொரு நபர் வெட்டி கொலை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது
நாங்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தேமுதிக ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தாது. நாங்கள் அதில் விதிவிலக்காக இருப்போம் என்றார்.
எத்தனை பாரதியார் எத்தனை பெரியார் வந்தாலும் பேசினாலும் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, மிக கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
அதேபோல லாக்கப் கொலைகள் நடக்கிறது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி எல்லாம் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
டாஸ்மாக்கும், கஞ்சா போதை விற்பனையும் இதற்கு எல்லாம் முழு காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லாமல் வடமாநிலத்தில் உள்ளவர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள் அதற்கு காரணம் போதை கலாச்சாரம், அதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு கொடுத்தால் இதுபோன்று போதைக்கு அடிமையாகாமல் வருங்கால தமிழகத்தை இளைஞர்கள் நல்ல முறையில் உருவாக்குவார்கள் என்றார்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம், அவரது ஓட்டலில் தங்கி இருந்ததால் அந்த சந்திப்பு நடந்து. ஹோட்டலில் தங்கி இருந்ததற்கு எல்லாம் கூட்டணி என்றால் எப்படி என கேள்வி எழுப்பியவர், கூட்டணிக்கு அதற்கும் சம்பந்தமில்லை என்றார்.
திமுக அதிமுக தனித்தனி கூட்டணி, விஜய்யின் நிலைப்பாடு ஏதும் தெரியவில்லை, சீமான் நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி 9 ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.
