ARTICLE AD BOX
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொங்கி விபத்துக்குள்ளானது.
மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானம் கீழே விழுந்துள்ளது.
இதையும் படியுங்க: 110 பேர் பலி..குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்த விமானம்.. சடலத்தை தூக்கி செல்லும் சோக காட்சி!
லண்டன் புறப்பட்ட போயிங் 787 விமானத்தில 242 பயணம் செய்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து 1.17 மணிக்கு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் கீழே விழுந்து தீ பிடித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான விபத்தில் தற்போது வரை 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து காரணமாக அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்துள்ளது. விடுதியில் சுமார் 60 டாக்டர்கள் உணவருந்திக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் கல்லூரி மருத்துவர்கள் பல பலியானதாக கூறப்படுகிறது.
