ARTICLE AD BOX
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும் 16ஆம் தேதி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அழைப்பிதழும் அச்சிடப்பட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். அந்த சமயம் தான், திருமண ஏற்பாடு, வரவேற்பு தொடர்பாக அடிக்கடி மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வர நேரிட்டது.
இதையும் படியுங்க: தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!
அடிக்கடி வந்ததால் மாமியாருக்கும், மருமகனுக்குமான உறவு பலமானது. மகளை விட மாமியார் அழகு கூடுதல் என்பதால் மருமகனோ மயங்கவிட்டார். இதனால் மாமியாருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் கேட்டால், திருமண ஏற்பாடு தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக கூறியதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
மருமகனும், மாமியாரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். இதையடுத்து திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், மாமியார் தனது மகள் திருமணத்துக்காக வைத்திருந்த நகை பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போனவர் வீட்டுக்கு வரவில்லை. அழைப்பிதழ் கொடுக்க சென்றிருப்பார் என உறவினர்கள் நினைத்தனர். ஆனால் இரவு ஆகியும் வீடு திரும்பபாததால் சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து பீரோவை திறந்து பார்க்கும் போது, நகை பணம் எதுவும் இல்லாததால், உடனே மாப்பிள்ளை வீட்டாருக்கு சென்று பார்த்தனர். அங்கு மாப்பிள்ளையும் இல்லை. இருவருக்கும் போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் என்று வந்ததால் அதிர்ச்சியடைந்த, மணப்பெண் மற்றும் மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
செல்போன் சிக்னலை வைத்து இருவரும் எங்கே உள்ளனர் என போலீசார் தேடி வருகின்றனர். வருங்கால மனைவியை சந்திக்க சென்ற மணமகன், மாமியாருடன் ஓட்டம் பிடித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.