ARTICLE AD BOX
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியகவுண்டம்பட்டியை சேர்ந்த அருள்ஜோதி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். கணவர் மாரிமுத்து பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதை பயன்படுத்திய மாமனார் சேட்டு (வயது 65) என்பவர் மருமகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோரிடம் சொல்லி அழுத அப்பெண் ஒவ்வொரு முறையும் வேறு பகுதிக்கு வீடு மாற்றி வந்துள்ளார்.
வாடகைக்கு வீடு மாற்றி வந்தாலும், சேட்டு விடுவதாக இல்லை. தொடர்ந்து இடத்தை கண்டுபிடித்து வந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதிக்கு வீடு மாறி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் மருமகளை தேடி மாமனார் வந்துள்ளார். தனியாக வசித்த அருள்ஜோதியிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
முடியவே முடியாது என மருமகள் கூற, கத்தியை எடுத்து வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் கொடூரமாக தாக்கியுள்ளான மாமனார். அலறி துடித்த அருள்ஜோதியை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மாமனாரின் வெறிச்செயலால் மருமகள் இறந்த நிலையில், 2 பெண் குழந்தைகள் நிற்கதியாய் தவித்து வருகின்றனர்.
