ARTICLE AD BOX
ரவி மோகன்-ஆர்த்தி விவகாரம்
ரவி மோகனும் ஆர்த்தியும் தங்களது பிரிவை அறிவித்ததில் இருந்து சமூக ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் அவர்கள் இருவரை குறித்த செய்திகளாகவே வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதனிடையே ரவி மோகனும் கெனீஷாவும் இணைந்து ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் கலந்துகொண்ட சம்பவத்திற்குப் பிறகு ஆர்த்தி ரவி மோகனை குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதன் பின் அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் 4 பக்கங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ரவி மோகன் ஆர்த்தியின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இவ்வாறு மாறி மாறி அறிக்கை போர் நடத்தி வந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், இருவரும் ஒருவருக்கொருவர் குறித்து சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மீண்டும் ஒரு அறிக்கை
இந்த நிலையில் ரவி மோகன் மீண்டும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ரவி மோகன் அவரது சட்ட ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இணையத்திலும் ரவி மோகனை குறித்து எழுதப்பட்ட பதிவுகளை ஆர்த்தியும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமாரும் நீக்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை பாயும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ரவி மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும், “மறுபடியும் ஒரு அறிக்கையா? வேண்டாம் ப்ளீஸ்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

5 months ago
74









English (US) ·